Imported post: Facebook Post: 2021-07-24T09:28:06
7/24/2021 05:58:00 AM
0
கன்னியாக்குமரியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கடந்த 18ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது இந்து மதம் மற்றும் பாரத பிரதமர் உள்ளிட்டோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவானதால் போலீஸார் தேடி வந்த நிலையில் மதுரை அருகே உள்ள கொட்டாம்பட்டியில் ஜார்ஜ் பொன்னையா பதுக்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை வைத்து தற்போது ஜார்ஜ் பொன்னையாவை போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து, 5 தனிப்படை அமைத்து தேடி வந்தனர், நேற்று நள்ளிரவில் அவரை மதுரை கருப்பாயூரணி பகுதியில் கைது செய்தனர் .... நம்நாடு செய்திகள்
