Breaking

இந்தியாவில் முதல்முறையாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சட்டமன்ற உறுப்பினர்

நம்நாடு செய்திகள்
0


அரசு மருத்துவமனையை நாடிய முதல் சட்டமன்ற #உறுப்பினர்

            கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. N.சதன்பிரபாகர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சற்றுமுன் அவர்களைத் தொடர்பு கொண்டு கொரொனா தொற்றிலிருந்து மீண்டுவரவும், மக்களின் மனம் விரும்பும் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் வலம்வரவும் இதய தெய்வங்கள் துணை புரிவார்கள் என தெரிவித்தோம். அப்போது அவரிடம் ""சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நீங்கள், தனியார் மருத்துவமனையில் முதல்தர சிகிச்சை பெற முயற்சிக்காமல், மாவட்ட அரசு மருத்துவமனையை நாடியது ஏன்? என கேள்வியெழுப்பினோம்....


மக்களால் நான் மக்களுக்காவே நான் என வாழ்ந்து மறைந்த புரட்சித்தலைவி அம்மா வழியில் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களும் , துணை முதல்வர் மாண்புமிகு ஓபிஎஸ் அவர்களும் தமிழகத்தில் கொரொனா தொற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, சுகாதாரத்துறை,  உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மீட்பு துறை என பல்வேறு துறைகள் மூலம் தமிழக மக்களைக் காப்பதற்காக போராடி வருகின்றனர்.. இந்த சூழலில் எனக்கு கொரொனா தொற்று இருப்பதை மருத்துவ பரிசோதனை மூலம் அறிந்து கொண்டேன், தமிழக அரசு கொரொனா தடுப்பில் சிறப்பாக செயல்படுவது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறிவருவதோடு, மக்களிடையே அரசின் செயல்பாடுகளைப் பற்றி தவறான வதந்திகளை நாள்தோறும் பரப்பி வருகின்றனர். அவர்களின் கூற்றுகளில் துளியும் உண்மையில்லை, அம்மாவின் அரசு என்றுமே மக்களைப் பாதுகாக்கும் அரசுதான் என்பதை நிரூபிப்பதற்காகவே கொரொனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை செல்வதைத் தவிர்த்து, இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பிச் சேர்ந்தேன், நிச்சயம் கொரொனா தொற்றிலிருந்து மீண்டு வருவேன், எடப்பாடியார் தலைமையிலான அரசு மக்களுக்கான அரசுதான் என்பதை மற்றவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் மக்கள் பணியில் ஈடுபடுவேன் என உறுதிபடக் கூறினார்...

ஒரு சட்டமன்ற உறுப்பினர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று சாதாரண மக்களும் உணரவேண்டும் என்கிற எண்ணத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது பாராட்டுக்குரியது. 

  • இதேபோல் மற்றவர்களும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று சாதாரண மக்களுக்கும் , அரசு மருத்துவமனைகள் மீதும் நம்பிக்கை ஏற்படும்....

Post a Comment

0Comments

Post a Comment (0)