Breaking

IAS அதிகாரிகளில் வித்தியாசமானவர் - இராமநாதபுரம் ஆட்சியர் குறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் பெருமிதம்!

நம்நாடு செய்திகள்
0

இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சில நாட்களுக்கு முன்பு பதவியேற்றவர் திருமதி ஜெ.யு.சந்திரகலா IAS ..


வர் பொறுப்பேற்ற
 2 வாரத்திற்குள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அரசு அதிகாரிகளுடன் அறிமுக கூட்டங்கள் நடத்துவது, அரசின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வது என பம்பரமாக சுழன்று வருகிறார்..

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்ட மக்களின் வருடாந்திர குறைதீர் முகாம் மற்றும் தாலுகா அலுவலக கணக்குகளைச் சரிபார்க்கும் பணிகள் (ஜமாபந்தி கூட்டம்) மாவட்டத்திலுள்ள 9 தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது..

இந்த ஜமாபந்தி கூட்டங்களிலும் தவறாமல் பங்கெடுத்து ஆய்வு செய்து வருகிறார்.. 
அதன் ஒருபகுதியாக கடந்த சில நாட்களாக பரமக்குடி தாலுகா அலுவலகத்திற்குட்பட்ட உள்வட்டங்களில் (பிர்கா) நடைபெறும் ஜமாபந்தி கூட்டத்தில் கலந்து கொண்ட இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி ஜெ.யு.சந்திரகலா அவர்கள், ஜமாபந்தி கூட்டம் முடிந்த பிறகு குறிப்பிட்ட உள்வட்டங்களில்  (பிர்கா) பணிபுரியும் வருவாய்த்துறையின் இரண்டாம் கட்ட(Revenue Inspector) , மூன்றாம் கட்ட (VAO) உள்ளிட்ட அதிகாரிகளின் பிரத்யோகமாக அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்..

இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற "பரமக்குடி மற்றும் மஞ்சூர்" உள்வட்டங்களில் (பிர்கா) பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர்கள் 40க்கும் மேற்பட்டோருடன் பிரத்யோக அறிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது... இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் தங்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு சந்திரகலா IAS அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.. 
அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் வருவாய்த்துறை ஊழியர்களுக்கு தங்கள் பணிகளில் எவ்வாறு ஈடுபட வேண்டும், மக்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகளை எவ்வாறு அனுக வேண்டும், என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினார்...
 
இதுவரையிலும் மாவட்ட ஆட்சியர் எவரும் செய்திடாத புதிய முயற்சியை தற்போதைய மாவட்ட ஆட்சியர் செய்து வருகிறார்... 
பொதுவாகவே மாவட்ட ஆட்சியர்கள் எதேனும் பிரச்சினையோ, புகார்களோ இருந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட பகுதி வருவாய்த்துறை ஊழியர்களை அழைத்துப் பேசுவர், பல கிராம நிர்வாக அலுவலர்கள் இதுவரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்திருப்பார்களா? என்றால் விரல்விட்டு எண்ணிவிடும் அளவில் தான் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்திருப்பார்கள்.. 

இதுதான் பல ஆண்டுகளாக பல மாவட்டங்களிலும் நடந்திருப்பது, மேலும் ஆனால் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றிருக்கும் ஆட்சியர் அவர்களோ வருவாய்த்துறை அலுவலர்கள் ஒவ்வொருவரையும் அறிந்து கொள்ளும் நோக்கில் இது போன்ற அறிமுக ஆலோசனைக் கூட்டம் நடத்தியதன் மூலமாக " மாவட்ட அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்பட வேண்டும் எனில், அதற்கு அச்சாணியாக விளங்குவது ( இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட) கடைநிலை அலுவலர்கள் தான்,  அவர்களை திறமையாக செயல்பட வைக்கவும், உற்சாகப்படுத்தவும் முயற்சியை முன்னெடுத்துள்ளார்... 

அவருடைய இந்த முயற்சியும், அனுகுமுறையும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உற்சாகமளிக்கக் கூடியதாக உள்ளது.. 


 

Post a Comment

0Comments

Post a Comment (0)