முதல்வர் ஸ்டாலின், அவருக்கு உறுதுணையாக இருக்கும் தலைமை செயலர் இறையன்பு ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். போஸ்டரில் உதயநிதி, அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோரின் படங்களும் இடம்பெற்றுள்ளன. மாற்று கட்சியினர் கூறுகையில், 'அரசு அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்தவே அதிகாரிகள் உள்ளனர். கட்சி வேறு; அரசு வேறு. இதுபோன்ற தி.மு.க.,வினரின் போஸ்டரால் அதிகாரிகள் மீதான நம்பிக்கை, மக்கள் மத்தியில் குலைந்து விடும்' என்றனர்.
நம்நாடு செய்திகள்