Imported post: Facebook Post: 2021-07-26T10:18:42
7/26/2021 06:48:00 AM
0
ராமநாதபுரத்தில் 3 போலி நிருபர்கள் கைது
ராமநாதபுரத்தில் பணம் பறிப்பில் ஈடுபட்ட 3 போலி நிருபர்களை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் நகரில் சில நாட்களாக 3 பேர் கடைகளுக்கு சென்று நிருபர்கள் எனக்கூறி மிரட்டி பணம் பறித்தனர். நேற்று அரண்மனை சாலை, சாலை தெருவில் ரூ.12,000 வசூல் செய்தனர். வழிவிடும் முருகன் கோயில் எதிரே தனியார் சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான பொருட்கள் விற்பதாக கூறி, ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டினர்.உரிமையாளர் ஜவஹர் அலி புகாரில் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் நிருபர்களான பாண்டியூர் முருகன் 30, பெருவயல் வேல்முருகன் 26, கீழக்கரை அருகே மாவிலாத்தோப்பு ரூபசிலன் 51, ஆகியோரை கைது செய்தனர். போலி அடையாள அட்டை கைப்பற்றப்பட்டது.