Breaking

Imported post: Facebook Post: 2021-07-21T09:34:51

நம்நாடு செய்திகள்
0
பார் கவுன்சில் வழகறிஞர்கள் சிலர் அமைச்சர் ஒருவரை கோட்டைக்கு சென்று சந்தித்த படத்தை வெளியிட்டிருந்தனர். அதில் முதல்வர்களின் வரிசையில் உதயநிதியின் படம் இருந்ததால் பல்வேறு விமர்சனங்களையும் உருவாக்கியது. பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலினின் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. முதல்வர் தந்த அட்வைசில் அந்த அமைச்சரின் அரசு அலுவலக அறையில் இருந்த உதயநிதியின் படம் எடுக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகத்தில் , முதல்வர்களின் படம் இருக்கும் வரிசையில் உதயநிதி படம் வைக்க வேண்டாம் எனவும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments

Post a Comment (0)