Breaking

#தமிழக_ரேஷன் கடைகளில் "இலவச அரிசி"க்கு கட்டணம்? தமிழக அரசு திட்டம்!

நம்நாடு செய்திகள்
0


மறைந்த #மக்களின்_முதல்வர்_ஜெயலலிதா  "தேசிய உணவு பாதுகாப்பு " சட்டத்தை, அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால் 

2016 நவம்பர் மாதம் "பொறுப்பு முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதலளித்தது...

தமிழக ரேஷன் கடைகளில், இரண்டு கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, மாதந்தோறும், இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதை, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், இந்திய உணவு கழகத்திடம் வாங்குகிறது.தமிழகத்தில் வசிப்பவருக்கு மட்டுமே, ரேஷன் கார்டும், ரேஷன் பொருட்களும் வழங்கப்படுகின்றன. மத்திய அரசு தற்போது, ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை துவக்கி உள்ளது.



இத்திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டு வைத்திருப்போர், எந்த மாநிலத்திலும், ரேஷன் பொருட்களை வாங்கலாம்.மற்ற மாநிலங்களில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், ஏழைகள் என, குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும், ரேஷனில், அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.அவை, தமிழகத்தில், வசதியானவர்களுக்கும் இலவசமாக தரப்படுகின்றன. அதற்கேற்ற வகையில், தமிழகத்தில் மட்டுமே, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப, ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதனால் பலரும், அரிசி கார்டு வாங்குகின்றனர். 



மேலும், பொங்கல் பரிசு போன்ற, அரசின் இலவச திட்டங்களும், அரிசி கார்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன.இதனால், ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்த, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விஷயத்தில், தமிழகஅரசு, எந்த முடிவும்எடுக்காமல் உள்ளது.இந்நிலையில், அடுத்த ஆண்டிற்குள், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்துமாறு, தமிழகம் உட்பட, அனைத்து மாநிலங்களையும், மத்திய அரசுஅறிவுறுத்தி உள்ளது.



முந்தைய காலங்கள் போல இல்லாமல், தற்போது, மத்திய அரசுடன் இணக்கமான போக்கை தமிழக அரசு கடைப்பிடித்து வருகிறது.இதனால், எப்படியும், ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த வாய்ப்புள்ளது.அப்படி அமல்படுத்தும் பட்சத்தில், தமிழகத்தில் வசிக்கும் பிற மாநிலத்தவர்களுக்கு மட்டும், ரேஷன் பொருட்களை, இலவசமாக வழங்குவதற்கு பதில், பணத்திற்கு விற்பது தொடர்பாக, உணவுத்துறை பரிசீலித்துவருகிறது.



இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷனில், அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்டவை வழங்க, ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய் செலவாகிறது. ரேஷன் கார்டில், எத்தனை உறுப்பினர் இருந்தாலும், மாதம், 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தார்.



அவர், உடல் நலக் குறைவால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, 2016 நவம்பரில், அந்த சட்டம், தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. இதனால், நான்கு உறுப்பினர்களுக்கு, 20 கிலோ அரிசியும், அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும், கூடுதலாக, 5 கிலோவும், இலவசமாக வழங்கப்படுகிறது.இதற்காக, அரசுக்குகூடுதல் செலவு ஏற்பட்டது. அரிசி கார்டுதாரர்கள், 10 கிலோ வரை, அரிசிக்கு பதில், கோதுமையை இலவசமாக வாங்கலாம். ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை, தற்போது, தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்றாலும், காலப்போக்கில் ஏற்க வாய்ப்புள்ளது.



தமிழகம் உட்பட, நாடு முழுவதும், 'ஆதார்' எண் அடிப்படையில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன.இதனால், தமிழகத்தில், எந்த ரேஷன் கடையிலும், ரேஷன் கார்டு தாரர்கள், பொருட்கள் வாங்கலாம்; ஆனால், அது நடைமுறைக்கு வரவில்லை. அதைச் செயல்படுத்தினால், மற்ற மாநில ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பொருட்கள் வழங்கும் தொழில்நுட்ப வசதியை இணைக்க முடியும்.


தமிழகத்தில், கட்டுமானம், ஓட்டல் போன்ற வற்றில், பிற மாநிலங்களைச் சேர்ந்த, 20 லட்சம் பேர் வசிப்பதாக, தகவல் கிடைத்துள்ளது. அதில், எத்தனை பேருக்கு, தங்கள் மாநிலங்களில், ரேஷன் கார்டுகள் உள்ளன என, தெரியவில்லை.ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், ரேஷனில், பிற மாநிலத்தவருக்கு மட்டும், அரிசி, கோதுமைக்கு பணம் வசூலிக்கலாம் என, பரிசீலிக்கப்படுகிறது.



அப்படி, அவர்களிடம் பணம் வசூலித்தால், தமிழகத்தில், ஏற்கனவே, அரிசி வாங்க முடியாத, சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத கார்டுதாரர்களும், தங்களுக்கும், அதே விலைக்கு அரிசி, கோதுமை கேட்க வாய்ப்புள்ளது.இதனால், கூடுதல் செலவு ஏற்படும் என்பதால், முடிந்த வரை, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.



ரேஷனில் வழங்க, மாதம், 3.13 லட்சம் டன் அரிசி தேவை. அதில், 1.93 லட்சம் டன் அரிசி, கிலோ, ௩ ரூபாய்; 1 லட்சம் டன், கிலோ, 8.30 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. மீதி தேவைக்கு, வெளிச்சந்தை விலையில், கிலோ, 25 ரூபாய்க்கு மேல் வாங்கப்படுகிறது.

Post a Comment

0Comments

Post a Comment (0)