Breaking

தேனி மதக்கலவரம்: தலித்தியம் பேசும் திருமா எங்கே? கொந்தளிக்கும் பாதிக்கப்பட்ட சமூகம்!

நம்நாடு செய்திகள்
0



தேனியில் இரு சமூகத்தினரிடையே நடந்த மதக்கலவரம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதுபற்றி பெரிய பெரிய ஊடகங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் வாய் திறக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிவாங்கியவர்கள் இந்துக்கள் என்பதால் கலவரம் மறைக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் வள்ளியம்மாள் என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த 64 வயது பெண்மணி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மரணமடைந்தார். இறுதி ஊர்வலத்திற்காக அவரது உடல் கொண்டு செல்லப்படும் போது, அந்த தெருவில் இருந்த இஸ்லாமியர்கள் வீட்டில் ஒரு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஒரு தலித் பெண்மணியின் உடலை எங்கள் தெரு வழியாக கொண்டு செல்வது எங்களது மத உணர்வை புண்படுத்தும் செயல் எனக்கூறி தடுத்துள்ளனர்.



உடலை எடுத்துச் செல்ல தலித் சமூகத்தினர் எவ்வளவோ மன்றாடியும், அவர்களை அடித்து விரட்டியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இரு தரப்பினைச் சேர்ந்தவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அன்றைய தினம் பிரச்னை முடிவுக்கு வந்தது. மேலும் காவல்துறை அனுமதியுடன் அந்த மூதாட்டியின் உடல் அந்த தெரு வழியே கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 5ம் தேதி (சனிக்கிழமை) முஸ்தபா என்பவர் தோட்ட வேலைக்கு சென்ற போது, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் தலித் மற்றும் முஸ்லீம் தரப்பினருக்குமிடையே கலவரம் உருவானது. அந்த மூதாட்டியின் உடலை சுமந்து சென்ற நபர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கலவரத்தில் தெருக்களில் உள்ள கடைகள், ஆட்டோ, பைக் என அனைத்தும் சூறையாடப்பட்டன.


youtube https://www.youtube.com/watch?v=PI0as_9WCT8


இந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். தலித் சமூக மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்து வருகிறார். தற்போது நிலைமை கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கலவரம் வெடிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு தெருவிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



இதற்கிடையே இந்த கலவரம் குறித்து தலித் சமூகத்தினர், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரை தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் சமூக வலைதளங்களில் கூறப்படுகின்றன.


தமிழ்நாட்டில் நடந்த இந்த பெரிய கலவரம் ஒரு சுவடு கூட தெரியாமல் அமைதியாக அரங்கேறியுள்ளது. ஒரு சில செய்தித்தாள்களை தவிர எந்த ஒரு ஊடகமும் இதுகுறித்து ஒருவரிச் செய்திகளில் கூட போடவில்லை. சமூக வலைத்தளங்களில் மட்டுமே ஒரு சிலர் இதுகுறித்து, அதுவும் அரைகுறையாக கருத்து தெரிவித்துள்ளனர். காஷ்மீரில் தமிழ் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதற்கும், காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் கண்டனம் தெரிவிக்கும் அரசியல் தலைவர்களுக்கு இந்த கலவரம் கண்ணுக்கு தெரியாமல்போனதற்கு என்ன காரணம்?

தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்காக எங்கள் குரல் ஒலிக்கும் என கூறிய பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் எங்கே சென்றன? கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் சீமான், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் இதுகுறித்து பேசவில்லையே ஏன்?.. ஒன்றுமில்லாத பிரச்னைக்கே கண்டன அறிக்கை என ஒரு முழு நீள கட்டுரையை வெளியிடும் இவர்கள் இந்த கலவர விவகாரத்தில் மௌன விரதம் இருக்கின்றனர். இஸ்லாமியரா? தலித்தா? என்ற பிரச்சனையில் யாருக்கு ஆதரவாக பேசினாலும் பிரச்சனை தான் என அவர்கள் ஒதுங்கியுள்ளார்களா? உண்மையில் இவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடுபவர்களா?


மக்களில் 99% பேருக்கு தேனியில் ஒரு கலவரம் நடந்ததா? என கேட்கும் அளவுக்கு ஊடகங்களும் இதை மறைத்துள்ளன. எங்கோ உலகின் ஒரு மூலையில் நடந்துள்ள செய்தியை 'ஹாட் நியூஸ்' ஆக போடும் நம்முடைய காட்சி ஊடகங்கள்...இந்த கலவரம் குறித்து தெரிவிக்கவில்லை. தலித்துக்கள் தானே இவர்கள்... என்பது தான் காரணமா?


அடி வாங்கியவர்கள் இந்துக்கள், அடி கொடுத்தவர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மூடி மறைக்கப்பட்டதா? தேனியில் நடந்த இந்த மதகலவரத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுப்பதுடன், அனைத்து சமூகத்தினரும் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தும் வரை இந்த செய்தியை அனைவருக்கும் கொண்டு சொல்வது நம் ஒவ்வொருவரின் கடமை.



Post a Comment

0Comments

Post a Comment (0)