Breaking

பாஜக காங்கிரஸ் கூட்டாட்சி?

நம்நாடு செய்திகள்
0
மிசோரம் மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் சக்மா பூர்வகுடிகள் அதிகமாக வாழும் பகுதி சக்மா மாவட்ட தன்னாட்சி கவுன்சிலாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. சக்மா மாவட்ட தன்னாட்சி கவுன்சிலில் மொத்தம் உள்ள 20 இடங்களில் 19 இடங்களுக்கு நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணிக்கு 8 இடங்களும், காங்கிரசுக்கு 6 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 5 இடங்களும் கிடைத்தன.எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், மாவட்ட கவுன்சில் நிர்வாகத்தை மேற்கொள்ள பாரதீய ஜனதாவும், காங்கிரசும் சேர்ந்து ஐக்கிய சட்டசபை கட்சி (யு.எல்.பி.) என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. அதன்படி, இந்த கூட்டணியின் தலைவராக பாரதீய ஜனதாவைச் சேர்ந்த சாந்தி ஜிபான் சக்மாவும், துணைத் தலைவராக புத்த லீலா சக்மாவும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். சாந்தி ஜிபான் சக்மா, மாவட்ட கவுன்சிலின் தலைவர் ஆகிறார்.தேசிய அளவிலும், பல்வேறு மாநிலங்களிலும் பாரதீய ஜனதாவும், காங்கிரசும் எதிர் எதிர் அணியில் இருந்தாலும், சக்மா மாவட்ட கவுன்சில் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்காக கைகோர்த்து உள்ளன.

இதுபற்றி மிசோரம் மாநில விளையாட்டு துறை மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான ஜோடின்ட்லங்கா கூறுகையில், இந்த கூட்டணியால் டெல்லி அரசியலிலோ அல்லது வருகிற மிசோரம் சட்டசபை தேர்தலிலோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)