Breaking

நடந்த நாடகம்!

நம்நாடு செய்திகள்
0
பதினைஞ்சு நாளு முன்னால ஜெயா டிவி நிர்வாகத்துல தலையிடக் கூடாதுனு துரத்தப்பட்ட விவேக்கை சில நாள் முன்பு ஜெயா டிவி நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டே ஆகனும் னு சிறையிலிருந்து உத்தரவு பறந்தது. ஏன்னு விசாரிச்சதுல ஜெயா டிவி பொறுப்பை பிடிங்கியதும் தன் நெருங்கிய உறவினரிடம் தன் ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார் விவேக். மேலும் இனியும் நான் அமைதியாக இருக்கப் போவதில்லை, விசாரணை ஆணையத்தில் நடந்த உண்மைகளைக் கூறிவிடுவதே அத்தை (ஜெயலலிதா அவர்கள்) என் மீது வைத்த பாசத்துக்கு நன்றிக்கடன் செலுத்துவது போலிருக்கும், என்றும் மனம் நொந்து புலம்பியிருந்தார். இதை நாம் பத்து நாட்களுக்கு முன்பு சில பதிவுகளில் இலைமறைகாயாக பதிவு செய்திருந்தோம்! விஷயமறிந்த சிறையிலிருந்து தடாலடி உத்தரவும் பறந்தது. அதையும் மீறி பிடிவாதம் பிடித்த விவேக்கை வீழ்த்த நிகழ்த்தப்பட்டதே மார்ச் 6 சிறையில் மயங்கி விழுந்த நாடகமென்று அறிந்தவர்கள் கூறினார்கள்.

Post a Comment

0Comments

Post a Comment (0)