Breaking

பரப்பன அக்ரஹாராவில் பரபரப்பு!

நம்நாடு செய்திகள்
0


கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது! மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. கடந்த 13 மாதங்களாக பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறை விதிமீறலில் ஈடுபட்டதாகவும், அதற்கு உடந்தையாக செயல்பட்ட சிறைத்துறை டிஜிபி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சில நாட்களே ஆன நிலையில் நேற்று இரவு 10:09 மணியளவில் சொத்துக்குவிப்பு வழக்கின் குற்றவாளி சசிகலாவுக்கு "கார்டியாக் அரெஸ்ட்" ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மயங்கி விழுந்த சசிகலாவுக்கு சிறை கைதிகளுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை விதிகளின்படி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுபற்றிய விவரங்களை அறிந்து கொள்ள பெங்களூரிலுள்ள சிறை அதிகாரிகள் தரப்பை தொடர்பு கொண்டு பேசியபோது தற்போதைய நிலைகுறித்து நாங்கள் தெரிவிக்க இயலாது, என்று கூறி தொடர்பை துண்டித்தனர்!

மத்திய அரசிற்க்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழக எம்பிக்கள் போராட்டங்கள் நடத்திவரும் சூழலில் சசிகலாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுவதை ஏற்க முடியாது என்றும், இது பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியம் சாமி மற்றும் தினகரன் ஆகியோரின் திட்டமிடல் படி நடத்தப்பட்டு வரும் நாடகங்களின் தொடர்ச்சி தான் "சசிகலாவுக்கு மாரடைப்பு " ,மேலும் நேற்றைய தினம் சசிகலாவை சந்திக்க திட்டமிட்டிருந்த தினகரன் திடீரென தனது பயணத்தை ரத்து செய்ததை சுட்டிக்காட்டிய மத்திய உளவு பிரிவு அதிகாரியொருவர் இது போல இன்னும் சில நாடகங்கள் சு.சாமி தினகரன் தரப்பால் நடத்தப்படும் நாடகங்களின் இறுதியில் சசிகலாவின் ஆயுளை முடித்து வைக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளதாகவும், தினகரனின் பதவி ஆசையை நன்கு புரிந்து வைத்துள்ள சு.சாமி மூலமாக பாஜக தனது எண்ணப்படி தினகரனை ஆட்டி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)