Breaking

சட்டப் பேரவைக் கூட்டத்தைப் புறக்கணித்த அதிமுக❓ பின்னனி என்ன ❔

நம்நாடு செய்திகள்
0

 தமிழகத்தில் தற்போது திமுக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது..


நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு,  பல்வேறு துறைகளுக்கான செலவினங்கள் குறித்து சட்டப் பேரவையில் விவாதங்கள் தற்காலிக சட்டப்பேரவை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது... 

இந்நிலையில் இன்று காலை சட்டப் பேரவை கூட்டத் தொடர் துவங்கும் முன்பாக  தமிழக எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டு சில முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தற்போது விசாரணை வேகமெடுத்துள்ளது. நேற்று இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் கொடநாடு விவகாரம் வெடித்தது.

சட்டப்பேரவைக்கு கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்த அதிமுக உறுப்பினர்கள், இந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரினர். ஆனால் பட்ஜெட் விவாதம் நடப்பதால் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. `தற்போது எதற்காக இந்த வழக்கை திமுக கையிலெடுத்திருக்கிறார்கள்?’ என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ``எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுக வினர் செயல்படுகின்றனர். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். கொடநாடு வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை. யாரும் அச்சப்பட தேவையில்லை. நீதிமன்ற அனுமதியுடன் தான் விசாரணை நடைபெற்று வருகிறது. உண்மை என்ன என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

 அதன் அடிப்படையில்  அவசரமாக சட்டப் பேரவைக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்...

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் சட்டப்பேரவை புறக்கணிப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் விளக்கமளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டும் எதிர்க்கட்சியினர், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால்  வெளிநடப்பு , புறக்கணிப்பு என்று வேடமிட்டு "எங்கப்பன் குதிருக்குள் இல்லை " என்று சொல்வது போல நடந்து கொள்கிறார்கள், "மடியில் கணமில்லாத போது, வழியில் பயமெதற்கு" என்று விளக்கமளித்துள்ளார்...

பின்னனி என்ன?

Post a Comment

0Comments

Post a Comment (0)