Imported post: Facebook Post: 2021-07-27T16:48:11
7/27/2021 01:18:00 PM
0
#பூனை கண்ணை மூடிக்கிட்டா ஒலகமே இருண்டுடும், னு நினைச்சிக்குமாம், அதே போல தான் இங்கு பலரும் எண்ணிக் கொண்டு செயல்படுகிறார்கள்....
மேட்டர் என்னன்னா கடந்த மாதம் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 26 நபர்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்...
இவர்களில் சி.செல்லத்துரை (சேலம் மாவட்ட ஒழுங்கு முறை விற்பனைக் கூடத் தலைவர்) என்பவரை மட்டும் அதிமுக வை விட்டு நீக்குவதாக கழக ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை வெளியிட்டனர், ஆனால் மற்ற 25 பேரும் இன்றுவரை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை....
சேலம் புறநகர் மாசெவும், எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ் தனது சொந்த மாவட்டத்தில், அதிமுகவினர் திமுகவில் இணைந்த செய்தி வெளியானால் தனது #சாணக்கியர் இமேஜ் தொண்டர்களிடம் குறைந்துவிடுமே, என்ற எண்ணம் காரணமாகவே 25பேரை அதிமுகவில் இருந்து நீக்கிய அறிவிப்பை வெளியிட வில்லை...
அறிக்கை வெளியிடலைன்னாலும், டெல்லி உளவுப்பிரிவு கரெக்டா மொத்த டேட்டாவையும் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு போய்ட்டாங்க, அதன் எதிரொலியாக நேற்றைய சந்திப்பு பல திகில்களைக் கிளப்பியுள்ளது...
சசிகலா வை ஏற்றுக் கொள்கிறீர்களா? இல்லையா? தீர்மானமாகச் சொல்லுங்க, பொறவு என்னை வந்து சந்திக்கலாம் னு, முக்கிய புள்ளி நேற்றிரவு முதல் இன்று முற்பகல் வரை கெடு விதித்துள்ளார்...
வேறு வழியின்றி பேசிட்டு சொல்றோம் னு நேரில் சந்தித்து சொல்லிவிட்டு திரும்பியிருக்கிறார்கள்....
#நமக்கான_வட்டத்தில் இருந்து கிடைத்தவை....