பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்களின் 83வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அவரை டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தன்னுடைய 83வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து ராமதாஸ் அவர்களின் உடல் நலம் பற்றியும் விசாரித்தார். மேலும் பிரதமர் மோடி ராமதாஸை டெல்லிக்கு வரும் படியும் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக அஇஅதிமுக வின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் இன்று மோடியைச் சந்தித்துப் பேசவிருக்கும் நிலையில், பாமக தலைவர் ராமதாஸிற்கும் டில்லி அழைப்பு விடுத்துள்ளது தமிழக அரசியலரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
Post a Comment
0Comments