#நாளை என்ன நடக்கும்❓❓❓
இரண்டு பூனைகள் ஒற்றுமையாக இருந்தன. என்ன உணவு கிடைத்தாலும் பங்கிட்டுச் சாப்பிட்டன. ஒருநாள் இரண்டும் ஒரே சமயத்தில் ஒரு அப்பத்தைக் கண்டன.அது நெய் அப்பம். அப்பத்தின் வாசனை சுயநலமாய் செயல்பட வைத்தது.
அப்பத்தை முதன்முதல் பார்த்தது நான்தான்! அதனால் அப்பம் எனக்குத்தான். போனால் போகிறதென்று உனக்கும் ஒரு விள்ளல் தருகிறேன்!'' என்று இரண்டுமே வாதிட்டன.
முடிவில், சரி! நாமே பேசிக்கொண்டிருந்தால் சரிவராது. யாராவது மத்தியஸ்தரிடம் போவோம்!'' என் முடிவு செய்து புறப்பட்டன. வழியில் ஒரு குரங்கைக் கண்டன.
அதனிடம் போய், குரங்காரே! எங்களுக்கு ஒரு அப்பம் கிடைத்திருக்கிறது. அதைச் சமமாய் பங்கிட்டு உதவ வேண்டும்!'' என கேட்டுக்கொண்டன.
குரங்கு ஏமாற்றும் குணம் கொண்டது. உள்ளுக்குள் மகிழ்ச்சியோடு வெளியில் சலிப்போடு ஒப்புக் கொண்டது.
எங்கிருந்தோ ஒர தராசைக் கொண்டுவந்தது. அப்பத்தை வேண்டுமேன்றே ஒரு பாதி பெரியதாகவும், மறுபாதி சிறியதாகவும் இருக்கும்படி புட்டது.
அடாடா! இது பெரியதாகிவிட்டதே!'' என்று பெரிய துண்டு அப்பத்தைக் கூடுதலாகக் கடித்தது. இப்போது சின்னத்துண்டு பெரியதாகி விட்டது. இப்போது அதைக் கடித்தது.
பூனைகளுக்கு குரங்கின் நோக்கம் புரிந்துவிட்டது. அதைச் சொன்னால் கடித்துக் குதறிவிடுமே!
அண்ணே! இனிமேல் நாங்கள் சண்டை போடமாட்டோம். மீதியிருக்கும் இரு துண்டு அப்பத்தையும் எங்களிடம் ஆளுக்கொன்றாகத் தந்துவிடுங்கள்!'' என்று கெஞ்சின.
குரங்கு கோபமாக, ஓஹோ! நான் மடையனென்று எண்ணிவிட்டீர்களோ? இதற்குள் எத்தனை பழங்களைப் பதம் பார்த்திருப்பேன்! வேலையற்றா தீர்ப்பு சொல்ல வந்தேன்? இத்தனை நேரம் உங்கள் வழக்கை விசாரித்ததற்கான கூலியாக இதைப் பெரியமனதுடன் ஏற்கிறேன்!'' என்றபடி மீதியிருந்த அப்பத்துண்டுகளை வாயில் போட்டுக்கொண்டது.
பூனைகள் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சென்றன.
#நாளைய_அரசியல் முடிவும் இப்படித் தான்...
Post a Comment
0Comments