அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை 10.30 மணிக்கு தனது குடும்பத்தினர் மற்றும் ஓபிஎஸின் தீவிர ஆதரவாளருமான ஆளங்குளம் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் டெல்லி சென்றார். நாடாளுமன்றத்தில் நாளை காலை 11.05 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்பில் அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பிரச்னைகள், சசிகலாவின் அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணிகள்,ஓ.பி.ரவிந்திரநாத்திற்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவது
உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்பட்டு வந்தது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை தொடர்ந்து
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.கோவையில் இருந்து
இன்று இரவு டெல்லி புறப்படும் ஈ.பி.எஸ் நாளை காலை தனது ஆதரவாளர்களான தங்கமணி , வேலுமணி, தளவாய் சுந்தரம் ஆகியோருடன் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .
#அவைத்தலைவர்
அஇஅதிமுக அவைத்தலைவர் உடல்நிலை நலிவடைந்துள்ள நிலையில், அஇஅதிமுக வின் சின்னம் அவைத்தலைவர் வசமே ஒப்படைக்கப்பட்டிருப்பதால், அவைத் தலைவர் மரணமடைந்தால் சின்னத்திற்கு மூன்று தரப்பும் உரிமை கோரும் சூழல் ஏற்படக் கூடும் என்பதால் உடனடியாக அவைத் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும், அவைத் தலைவர் தனது ஆதரவாளராக இருக்க வேண்டும் என்பதிலும் இரட்டையர்கள் பிடிவாதமாக இருப்பதாலும், நாளைய தினம் மத்தியஸ்தம் செய்யும் வேலைகளில் பிரதமர் அலுவலகம் ஈடுபடும் என்று நம்பத் தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன...