Breaking

எடப்பாடியாரின் ராஜ்யம் தானா? இனி தமிழகத்தில்!

நம்நாடு செய்திகள்
0

 


#இதுவரை கண்டிராத குழப்பமான அரசியல் சூழலில், தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. 

பல்வேறு கருத்துக்கணிப்புகளும், பல மூத்த களப்பணியாளர்களும் இம்முறை ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிதான் என அடித்துக் கூறிவரும் நிலையில் இம்முறையும் எடப்பாடி அரசுதான், அவருக்குதான் எண்கள் தமிழகத்தோடு ஒத்துப்போகிறது, அவரது வெற்றியை யாராலும் தடுக்கவேமுடியாது என ஆணித்தரமாக கூறியுள்ளார் திருச்சியின் பிரபல எண்கணித ஆய்வாளர் சுரேஷ் ஆழ்வார்.

இதுகுறித்து அவரிடம் நேரில் சென்று கேட்டபோது, “எண் கணிதம் என்பது நம்முடைய தினசரி காலண்டரில் பின்புறம் வரும் ஒன்று. 

இதைப்பற்றிதான் நாம் சிலதகவல்களை பேசஉள்ளோம். நியூமராலஜி என்பது ராஜாக்களைப் பற்றிப் பேசக் கூடியது, ராஜ்ஜியம் ஆள்பவர்களை சொல்லக்கூடிய ஒன்று. அப்படி நாம் தமிழகத்தை எடுத்துக் கொண்டோம் என்றால் நியூமராலஜிப்படி 29 என்ற எண் வரும். இதைக் கூட்டினால் 2 வரும். 

இந்த நிலையில் தமிழகத்தை தொடர்ச்சியாக ஐந்து வருடம் ஆட்சி செய்ய வேண்டும் என்றால், தமிழகத்தை ஆள்பவர்களின் பிறந்ததேதி, மாதம், வருடம் ஆகிய மூன்றையும் கூட்டினாலோ, அல்லது பிறந்த தேதியை மட்டும் கூட்டினாலோ கூட்டுத்தொகை 6, 7, 8 என்ற எண்ணில் வரவேண்டும். அதேபோல் கூட்டுத்தொகை 3 அல்லது 9 வந்தால் அவர்களால் நிச்சயம் தமிழகத்தை ஆளமுடியாது, அதைமீறி ஆட்சி செய்தாலும் அமைதியான முறையில் நடத்த முடியாது என்பதை அடித்துச் சொல்லுவேன். அதற்கு, நான் சில உதாரணங்கள் சொல்கிறேன்.

1954 முதல் 1963 வரை தமிழகத்தில் முதல்வராக இருந்தவர் கு. காமராஜ். அவரதுபிறந்தநாள் 15.07.1903. இதைக் கூட்டினால் மொத்தம் 26 வரும், கூட்டு எண் 8. அதேபோல் பிறந்த தேதியைக் கூட்டினால் எண் 6 வரும். இவருக்கு இரண்டுமே சாதகமாக இருந்ததால்தான் இவரால் தமிழகத்தின் அடித்தளக் கட்டுமானம் சிறப்பாக அமைக்கப்பட்டது. அதேபால் பள்ளிக்குழந்தைகளுக்கு இலவசமதிய உணவுத் திட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார். இவர் 9 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சி கொடுக்க அவரது கூட்டு எண்தான் முக்கியக் காரணம். 

1963 முதல் 1967 வரை முதல்வராக இருந்தவர் எம். பக்தவத்சலம். இவரதுபிறந்தநாள் 09.10.1897. இதைக் கூட்டினால் மொத்தம் 44 வரும், கூட்டு எண் 8. இவர் முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிருவாகத் திறனைதிறம்பட வெளிப்படுத்தியவர். இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தைக் எவ்வித சிக்கலுமின்றி கொண்டு வந்தவர். 

1967முதல் 1969 வரை கா. ந. அண்ணாதுரை முதல்வராக இருந்தார். இவரது பிறந்த நாள் 15.09.1909. இதைக் கூட்டினால் மொத்தம் 34 வரும், கூட்டு எண் 7. இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். இவரது ஆட்சிக் காலத்தின் திருப்புமுனையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போதுவரை திராவிடக் கட்சிகளின் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார். 

1969முதல் 1971, 1971 முதல் 1976, 1989 முதல்1991, 1996 முதல் 2001 மற்றும் 2006 முதல் 2011 என தமிழகத்தில் ஐந்துமுறை முதலமைச்சராக இருந்தவர் மு.கருணாநிதி. 03.06.1924 பிறந்தஇவரின் கூட்டுத்தொகை 25. கூட்டு எண் 7.ஐந்து முறை ஆட்சியில் இருந்தால் இவரின் பிறந்த தேதி 3 என்பதால் இவரது ஆட்சியில் சில கசப்பான சம்பவங்கள் நடந்தது. கச்சத்தீவு, காவிரிப் பிரச்சனை, இலங்கையில் ஏற்பட்ட உச்சக்கட்டபோரில் லட்சக்கணக்கான தமிழர் கொல்லப்பட்டது என முக்கியப்பிரச்சனைக்களுக்கு மற்றொரு காரணமாக இருந்தது அப்போது மத்தியில் ஆட்சிசெய்துகொண்டு இருந்த இந்திராகாந்திதான். இந்திரா காந்தியின் பிறந்தநாள் 19.11.1917. மொத்தம் 30 வரும். கூட்டு எண் 3, இது முற்றிலும் தமிழகத்துக் எதிரான எண்ணாகும். கருணாநிதியால் தமிழகத்துக்கு எதிரான செயல்பாடுகளை எதிர்த்து போராட முடியாமல் போனதுக்கு காரணம் அவரின் பிறந்ததேதி 3 என்பதால்தான்,இவர்களைத் தொடர்ந்து 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் எம். ஜி. ஆர். இவரது பிறந்தநாள் 17.01.1917.இதை கூட்டினால் 27ம் பிறந்த தினத்தைக் கூட்டினால் 8ம் வரும். அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப் பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டு பின்னர் தொடர்ந்து மூன்று முறை முதல்வர் பதவியில் இருந்தவர். பலசிறப்பான திட்டங்களும், மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கவும் இவரது பிறந்தஎண்ணான 8 இவருக்கு பெரிதும் உதவியது.அடுத்ததாக ஐந்து முறை பதவி முதல்வர் பதவி வகித்தவர் ஜெ. ஜெயலலிதா. இவர் 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில்சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார்.2015 மே 23 முதல் இறக்கும் வரை பதவியில் இருந்தார். இவரது பிறந்தநாள் 24.02.1948, மொத்த தொதை 30, கூட்டு எண் 3. இருப்பினும் இவரது பிறந்த தினமானது 24, கூட்டினால் 6. கூட்டு எண் 3 வருவதால் பல சிக்கல்களைச்சந்தித்தஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி சிறைசென்றது குறிப்பிடத்தக்கது. பல தடைகளையும் மீறி இவரால் தமிழக முதல்வராக திறம்பட செயல்புரிய காரணம் இவரது பிறந்ததினத்தின் கூட்டு எண் தான் என பெருமூச்சு விட்டார்.

#தற்போதைய_நிலை

எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் தேதி என்பது 02.03.1954. இதைக் கூட்டினால் எண்6 வரும். இந்த 6ம் எண் என்பது தமிழகத்திற்கு 

மிகவும் ராசியான நம்பர். அதேபோல், எடப்பாடியின் ராசியானது, தண்ணீர் ராசி. இது தமிழகத்தில் ஆட்சியமைக்க மிகவும் தேவையான ஒன்று. இவருடைய பிறந்த நாள் மற்றும் மாதத்தை கூட்டினால் எண் 5 வரும். இந்த எண் அனைவரையும் அனுசரித்து செல்வதற்கான ஒரு எண்ணாகும். சொல்லப்போனால் காமராஜருக்கு பிறகு ஒரு எதிர்ப்பு எண் இல்லாத நபர் என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான். ஊர்ந்து வந்தார், தவழ்ந்து வந்தார் என இவர் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் முதல்வர் பதவியை எதிர்பார்க்காததால் இவருக்கு இப்படி ஒரு ஜாக்பாட் அடித்தது. அதேபோல், மேலே மத்திய அரசையும், உள்ளே கட்சியின் சீனியர்களையும், கூட்டணிக் கட்சியினரையும் திரம்பட அனுசரித்துச்செல்வது தான் இவரின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. தண்ணி ராசிக்காரர் என்பதால் இவரது ஆட்சிக்காலத்தில் பழுதடைந்து சரி செய்யப்பட்ட நீர் நிலைகளில் இவரது பெயர் இடம்பிடித்தது. இதுபோன்று பல நன்மைகள் இவரைத் தேடி வருவதற்கு காரணம் இவரது ராசிதான். 6ம் எண்ணில் அசுரகுரு உள்ளதால் இந்த முறையும் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தான் வருவார். ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை14.01.1951 இல் பிறந்தவர். இவரது கூட்டுத் தொகை 22, கூட்டு எண் 4. இவருக்கு குருட்டு அதிர்ஷ்டத்தில் தான் முதல்வர் பதவி தேடிச் சென்றது. இவரின் எண்களைப் பொறுத்தவரை முட்டுக்கொடுக்கும் மாற்றுகருவியாகதான் இருக்க முடியுமே தவிர இவரால் ஒருபோதும் நீண்ட காலதமிழக முதல்வராக செயல்பட முடியாது. அவ்வப்போது கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ள மட்டும்தான் இவர் பயன்படுத்தப்படுவார்.

அதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 01.03.1953 இல் பிறந்தவர். இவரது கூட்டுத்தொகை 22. கூட்டு எண்4. தலைகீழாக நின்றாலும் ஸ்டாலினால் தமிழகத்துக்கு முதல்வராக முடியாது. இதை நான் அடித்து சொல்வேன். காரணம் ஸ்டாலினின் எண் தமிழகத்தின் எண்ணுடன் ஒருபோதும் ஒத்துப்போகாது. அதேபோல், திமுகவைப் பொறுத்த வரை மற்ற அனைத்து மூத்த நிர்வாகிகளுமே கலைஞருடைய ராசிகாரர்கள்தான். துரைமுருகன், நேரு உள்ளிட்டோர் அனைவருடைய எண்களும் 3ல் தான் வரும். தமிழகத்துக்கு 3ம் எண்எப்போதும் எதிர் நம்பர். அப்படி திமுகவில் இருக்கும் அனைவரையும் எடுத்துக் கொண்டோம் என்றால் அது எதிர் நம்பராகத்தான் வருகிறது. ஆனால், உதயநிதி ஸ்டாலினை எடுத்துக் கொண்டால் அவரது பிறந்தநாளானது 27.11.1977, கூட்டினால் 35 வரும். கூட்டுஎண் 8. பதவிக்கு ஆசைப்படாமல் கட்சிப்பணி ஆற்றி, திமுகவினர் உதயநிதியை முன்னிருத்தினால் முதல்வருக்கான ராசி உதயநிதி ஸ்டாலினுக்கு பிரகாசமாக உள்ளது. அவருடைய பிறந்தநாள் தேதியை கருத்தில் கொண்டால் எண்9 வருகிறது. அதனால் போலீஸ் வழக்கு சிலவற்றை சந்திக்க நேரிடும். இருப்பினும் 

உதயநிதியும் தண்ணீர் ராசிகாரர்தான் என்பதால் தமிழகத்துடன் ஒத்துப்போகும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.இவர்களைத் தவிர, ரஜினிகாந்த் 12.12.1950 இல் பிறந்தவர், கூட்டுத் எண் 3, அதனால் இவருக்கும் தமிழகத்தில் வாய்ப்பில்லைஎன்பதை நான் முன்பே கூறியுள்ளேன். 

அதேபோல், சசிகலா. டிடிவி தினகரனுக்கும் வாய்ப்பில்லை. ராகுல் காந்திக்கு மத்தியில் ஆளும் வாய்ப்பு மிக மிக குறைவாகவேஉள்ளது, பாஜகவில் அமித் ஷா, யோகி போன்றோர்களுக்கும் மத்தியில் ஆளும் வாய்ப்பு இல்லை.

எனவே 2021 ஆம் ஆண்டுசட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் எடப்பாடி தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. 

மாறாக திமுகவில் உதயநிதியை முன்னிலைப் படுத்தினால் இருவருமேதண்ணி ராசிகாரர்கள் என்பதால் போட்டி சற்று கடினமாக இருக்கும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பிரபலதொலைக்காட்சிகளும் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளதே என்ற கேள்விக்கு.... அனைத்து தொலைக்காட்சிகளும் ஒரு திணிப்பின் காரணமாகத்தான் திமுக ஆட்சி அமைக்கும் என்கின்ற கருத்து கணிப்பை வெளியிட்டு உள்ளனர். உதாரணமாக பிரசாந்த் கிஷோர் என்பவர் பீகார் மாநிலத்தில் தோல்வியைத் தழுவினார். அதேபோல தமிழகத்திலும் திமுக தோல்வியைத் தழுவும். 

எண் 6ல் அசுரகுரு உள்ளதால் நிச்சயமாக எடப்பாடிதான் ஆட்சி அமைப்பார். இவ்வளவு ஏன் தேர்தல் நடந்த தேதியே 6ம் தேதிதான்” என்றார் 

பிரபல நியூமராலஜிஸ்ட் சுரேஷ் ஆழ்வார்!!


நன்றி நேஷனல் டுடே

Post a Comment

0Comments

Post a Comment (0)