Breaking

ஊழலுக்காக திமுக வின் ஆட்சி கலைக்கப்பட்ட நாள் இன்று!

நம்நாடு செய்திகள்
0

ஊழலுக்கு பெயர்போன திமுக அரசு 1976ஆம் ஆண்டு இதே நாளில் கலைக்கப்பட்டது. ஊழல் புகாரால் கலைக்கப்பட்ட முதல் ஆட்சி என்ற வரலாற்று அவமானத்தையும் திமுக சந்தித்த நாள் இன்று... 


தி.மு.க ஆட்சி 1971 தொடக்கம் 1976 வரை நிடித்தது. அதன் பின்னர் ஆட்சி கலைப்பால் ஜானாதிபதி ஆட்சி 1977 வரை நிடித்தது. அதன் பின்பு நடந்த தேர்தலின் எம்.ஜி.ஆர் அமோக வெற்றி பெற்றார். இதன் பின்பு சுமார் 12 ஆண்டுகாலம் தி.மு.கவால் ஆட்சியை பிடிக்கமுடியவில்லை. எம்.ஜி.ஆர் ரின் மறைவுக்கு பின் 1989 ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.க அரியனை எறியது. அதுவும் அதிக காலம் நிடிக்கவில்லை. எம்.ஜி.ஆர் ரின் புகார் தவிந்து இன்னுமொருகாரணமும் இந்த ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னால் உண்டு. அப்போது மத்தியில் இந்திரா பொது தேர்தலை தவிர்ப்பதற்காக 1975 இல் அவரசகால நிலையை பிரகனப்படுத்தி இருந்தார்.

திமுக என்றால் ஊழல், ஊழல் என்றால் திமுக என்பதுதான் தமிழகம் எப்போதும் காணும் உண்மை. வரவு, செலவுக் கணக்கு கேட்டதற்காக கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆரை வெளியேற்றிய திமுக , பின்னர் ஊழலில் திளைத்தது. கடந்த 1976ஆம் ஆண்டில் ஜனவரி 31ஆம் தேதி இதேநாளில், ஊழல் புகார் காரணமாக கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டது. ஆட்சிக் கலைப்பு தொடர்பான ஆளுநர் கே.கே.ஷாவின் அறிவிப்பில் தமிழகத்தில் நடந்தது முறையற்ற ஆட்சி என்று குறிப்பிடப்பட்டு இருந்ததோடு, ஏன் அது முறையற்ற ஆட்சி என்பதற்கு 7 

காரணங்களும் பட்டியலிடப்பட்டு இருந்தன. அவற்றில், வீராணம் குடிநீர்த் திட்டத்தில் நடந்த முறைகேடு, 1973ஆம் ஆண்டில் மத்திய அரசு தந்த வறட்சி நிவாரண நிதியை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தியது, தமிழக மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை முறைக்கேட்டுக்கு வாய்ப்பை உருவாக்கியது. நான்காவது ஐந்தாண்டு திட்ட நிதியை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் மிக முக்கியமானவை. ஊழல் புகாரால் கலைக்கப்பட்ட முதல் ஆட்சி என்ற வரலாற்று அவமானத்தையும் திமுக சந்தித்தது. இதன் பின்னர் அதே 1976ஆம் ஆண்டில் திமுகவின் ஊழல்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரிரா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது அன்றைய காங்கிரஸ் ஆட்சி. நீதிபதி சர்க்காரியா, திமுகவின் ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விரிவாக ஒரு அறிக்கையையும் அளித்தார். திமுகவின் ஊழல்களை ‘விஞ்ஞானபூர்வ ஊழல்கள்' என்று முதன்முதலில் கூறியது இந்த அறிக்கைதான். இந்த அறிக்கை மட்டும் வெளியே வந்தால் ஒருபோதும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதை உணர்ந்த திமுக, அதுவரை எந்தக் கட்சியை எதிர்த்து அரசியல் நடத்தி வந்ததோ, எந்த காங்கிரஸ் கட்சியால் நெருக்கடி நிலையில் பல உயிரிழப்புகளை சந்தித்ததோ, எந்தக் காங்கிரஸ் கட்சி தங்கள் ஆட்சியைக் கலைத்ததோ அதே காங்கிரஸ் கட்சியுடன் முதன்முறையாக கூட்டணி வைத்தது. இதனால் சர்க்காரியாவின் அறிக்கைகளை வெளியிடாமல் இந்திரா காந்தி மறைத்தார். இன்று அந்த அறிக்கையின் பிரதிகள் கூட யாரிடமும் இல்லை. அத்தோடு திமுகவின் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளும் அப்போது நிறுத்தப்பட்டன. மாநில அரசை ஊழல் காரணமாக இழந்த திமுக பின்னர் மத்திய அரசிலும் ஊழல் செய்ய இந்தக் கூட்டணியே பின்னர் காரணமாக அமைந்தது.

Post a Comment

0Comments

Post a Comment (0)