Breaking

No title

நம்நாடு செய்திகள்
0



தூத்துக்குடியில் உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம்



தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் திருநெல்வேலி சரக காவல் துணை தலைவர் திரு.பிரவீண்குமார் அபிநபு இ.கா.ப.¸ அவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் 04.07.2020ம் தேதி நடைபெற்றது.



இக்கூட்டத்தில் உதவி ஆய்வாளர்கள் பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்¸ புகார் மனுக்களை விசாரிக்கும் முறை பற்றியும்¸ காவல் நிலைய ஆவணங்களை பராமரிப்பது குறித்தும்¸ காவல் நிலையப்பணிகளை சட்டப்படி மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனவும்¸ குற்றவாளிகளை கைது செய்யும்போது உச்ச நீதிமன்ற கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல அறிவுரைகளை எடுத்துரைக்கப்பட்டது.



பின் உதவி ஆய்வாளர்களின் நிறை¸ குறைகளையும் கேட்டறியப்பட்டது. காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் நமது செயல்பாடு இருக்கவேண்டும் என்றும் அறிவு வழங்கப்பட்டது.



மேலும் பொதுமக்களிடம் சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.







Post a Comment

0Comments

Post a Comment (0)