கொரோனா வைரஸால் உலகம் முழுக்க இதுவரை 90 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு
தடுப்பு மருந்து கண்டறியப்படாத நிலையில் வருமுன் காக்கும் நடவடிக்கைகளே
தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும்
நிலையில், கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய தடுப்பு மருந்தினை கண்டறிய உலகம் முழுவதும்
ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் சித்தா, ஆயுர்வேதா ஆகிய மருத்துவ
முறைகளிலும் கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் கண்டறியும் பணிகள் நடைபெற்று
வருகின்றன.

இந்நிலையில், கொரோனா வைரஸை தடுக்கும் ஆயுர்வேத மருந்து ஒன்றைக்
கண்டறிந்துள்ளதாகப் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது. பதஞ்சலி நிறுவனம் கண்டறிந்த
மருந்தைக் கொரோனா பாதித்தவர்களுக்குக் கொடுத்து சோதித்துப் பார்த்ததில் 5 முதல் 14
நாட்களில் அனைவரும் முழுமையாகக் குணமடைந்ததாக, அந்நிறுவன சி.இ.ஓ ஆச்சார்யா
பால்கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு பதஞ்சலி நிறுவனம் தடுப்பு மருந்து
கண்டுபிடித்ததாக தகவல் வெளியானதையடுத்து, உலகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் உள்ள
மக்களும் இணையத்தில் இதுதொடர்பாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே சமீப நாட்களாக
நடத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்து
கண்டுபிடித்து விட்டதாகக் கூறி, விளம்பரம் செய்து வரும் பதஞ்சலி நிறுவனத்திற்கு,
மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அறிவியல் பூர்வமான ஆய்வு பற்றிய விவரங்கள்
குறித்து அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தாமல், இது போன்ற விளம்பரங்களை செய்யக்கூடாது
என எச்சரித்துள்ளது.