Breaking

#தமிழக_அமைச்சர்_நீக்கப்பட்டார்! ஆளுநர் பிறப்பித்த உத்தரவு!

நம்நாடு செய்திகள்
0
சென்னை: தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் அதிரடியாக நீக்கப்பட்டார்.



தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் செயல்பட்டு வந்தார். அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்திற்கு தலைவர் பதவியில் யாரும் நியமிக்கப்படாததால் இவரே அதன் தலைவர் பொறுப்பையும் கவனித்து வந்தார்.

இந்நிலையில் கால்நடைத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், அரசு கேபிள் 'டிவி' நிறுவன தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவர் தலைவராக பொறுப்பேற்று பணிகளை துவக்கிய நிலையில் அமைச்சர் மணிகண்டன், அவருக்கு ஒத்துழைப்பு தராததுடன், கடுமையாக விமர்சித்தும் வந்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மணிகண்டன் இன்று(ஆக.,7) அளித்த பேட்டியில், கேபிள் டிவி தலைவரால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது,'' என்று விமர்சித்தார்.

மணிகண்டனின் இந்த பேச்சு அ.தி.மு.க.,வில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் முதல்வரின் கவனத்திற்கு சென்றதும், மணிகண்டன் இன்று(ஆக.,7) இரவு தமிழக அமைச்சரவையில் இருந்து, அதிரடியாக நீக்கப்பட்டார். மணிகண்டன் வகித்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறை, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் கூடுதலாக தரப்பட்டுள்ளது.


முதல்வர் பழனிசாமி பரிந்துரைப்படி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் அமைச்சர் ஒருவர் நீக்கப்படுவது இதுவே முதல் முறை. குற்ற வழக்கில் தண்டனை பெற்றதால் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை தானாகவே இழந்தார். தற்போது மணிகண்டன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது அ.தி.மு.க., நிர்வாகிகள், அமைச்சர்களை கலக்கமடைய வைத்துள்ளது.

Post a Comment

0Comments

Post a Comment (0)