சென்னை: 'வாரிசுகளுக்கு 'சீட்' தரக்கூடாது' என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், போர்க்கொடி துாக்கி உள்ளனர். உறவுகளுக்காக முட்டி மோதும் தலைவர்களுக்கு அக்கட்சிகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதியவர்களுக்கும், கட்சிக்காக பாடுபட்டோருக்கும், வாய்ப்பு தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
நேர்காணல்:
தி.மு.க., - அ.தி.மு.க., வில் மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகள் 'சீட்' கேட்டு விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர். தி.மு.க., பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலுாரில் போட்டியிட விரும்புகிறார். அவருக்கு ஆதரவாக அம்மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 150 பேர், கட்சியில் விருப்ப மனு அளித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் போட்டியிட முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட செயலருமான பொன்முடியின் மகன், தெய்வசிகாமணி, விருப்ப மனு தந்துள்ளார். அதேபோல வட சென்னையில் போட்டியிட முன்னாள் அமைச்சர் வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி விருப்ப மனு அளித்து உள்ளார்.
துாத்துக்குடி - கனிமொழி; ஸ்ரீபெரும்புதுார் - டி.ஆர்பாலு; அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்; மத்திய சென்னை - தயாநிதி; நீலகிரி - ராஜா; தஞ்சாவூர் - பழனிமாணிக்கம் என பழைய முகங்களே மீண்டும் போட்டி யிடுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.
மீதமுள்ள தொகுதிகளையும் 'மாஜி'க்களின் வாரிசுகளுக்கு வழங்கினால் கட்சிக்காக உழைத்த மற்றவர்களுக்கு தேர்தலில் நிற்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகும். அதனால் வாரிசுகளுக்கு சீட் அளிக்க எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் போர்க்கொடி துாக்கி உள்ளனர். அதையும் மீறி வாரிசுகளுக்காக 'மாஜி'க்களும், மாவட்ட செயலர்களும் முட்டி மோதும் நிலைமை தி.மு.க.,வில் காணப்படுகிறது.
ஆளும் அ.தி.மு.க., விலும் இதேபோன்ற சூழலே உள்ளது. அக்கட்சியில் தென் சென்னைக்கு அமைச்சர் ஜெயகுமார் மகன் ஜெயவர்தன்; தேனி - துணை முதல்வர் மகன் ரவீந்திரநாத்; விழுப்புரம் - அமைச்சர் சி.வி.சண்முகம் சகோதரர் ராதாகிருஷ்ணன்; மதுரை - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன்;
கடலுார் - அமைச்சர் எம்.சி.சம்பத் மகன் பிரவீன்; கரூர் - அமைச்சர் விஜயபாஸ்கர் தந்தை சின்னசாமி; திண்டுக்கல் - முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் மைத்துனர் கண்ணன் ஆகியோர், விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
அதிர்ச்சி:
இது தவிர முதல்வர் பழனிசாமி மகன் மிதுன்; அமைச்சர் வேலுமணி சகோதரர் அன்பரசன் உள்ளிட்டோரும் களம் இறங்க ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். தி.மு.க.,வின் வாரிசு அரசியலை, கடுமையாக விமர்சித்து வரும், அ.தி.மு.க.,வில், வாரிசுகளுக்கு, 'சீட்' கிடைக்க, அமைச்சர்கள் காய் நகர்த்துவது, ஆளும் கட்சியினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெ., இருந்தவரை, வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதில்லை; ஒன்றிரண்டு பேர் விதிவிலக்கு. அதே வழிமுறையை, இப்போதும் கடைபிடிக்க வேண்டும் என, அ.தி.மு.க., நிர்வாகிகள், கட்சி தலைமையை வலியுறுத்தி உள்ளனர். வாரிசுகளுக்கு வாய்ப்பு கொடுக்காமல், புதியவர்களுக்கும், கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கும், வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, இரு கட்சிகளிலும் வலுத்துள்ளது.