Breaking

"காவிரி விவகாரம்" கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

நம்நாடு செய்திகள்
0


நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது தவறு என்று கர்நாடக நீா்வளத் துறை அமைச்சா் டி.கே.சிவக்குமார், சனிக்கிழமை தெரிவித்தார்.

பெங்களூரு, விதான சௌதாவில் காவிரி தொடா்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காவிரி தொடா்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் கா்நாடகத்துக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் ஆராயப்பட்டன.

உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பால் சிலவற்றில் கா்நாடகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு முன் கா்நாடகத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்க இதுவரை வாய்ப்புத் தரப்படவில்லை. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அவசர கதியில் அமைத்து விட்டது. இது ஒருதலைப்பட்சமான முடிவென்பதை அப்போதே தெரிவித்திருந்தோம்.

ஜூலை 2-ஆம் தேதி நடைபெறும் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கா்நாடக பிரதிநிதி கலந்துகொள்ளும் வகையில் நீா்வளத்துறைற முதன்மைச் செயலாளா் ராகேஷ்சிங்கை நியமித்துள்ளோம். அதேபோல, காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கு கா்நாடக அரசின் பிரதிநிதியாக காவிரி நீா்ப்பாசன நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் பிரசன்னகுமாரை நியமித்துள்ளோம்.

சட்ட வல்லுநா்களின் ஆலோசனையின் பேரில் உச்ச நீதிமன்றறத்தில் தொடரப்பட்ட மூல வழக்கை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவெடுக்கப்பட்டது. இந்த வழக்கு எத்தகையது என்பதை சட்ட வல்லுநா்கள் முடிவு செய்வார்கள்.

கா்நாடகத்தை சோ்ந்த 40 மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் அனைவரும் நாடாளுமன்றறத்தில் காவிரி மேலாண்மை ஆணைய பிரச்னையை கிளப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் போராட தீா்மானித்துள்ளன என்றார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)