Breaking

வேலியே பயிரை மேய்ந்த அவலம்! தலைமைக் காவலரின் "காம லீலை"

நம்நாடு செய்திகள்
0


நெல்லை காவலர் காம களியாட்டம்?
புகாரளிக்க வரும் பெண்களை மிரட்டிப் பணிய வைத்த அவலம்!
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் நடராஜன்!

இவர் மீது தற்போது பாலியல் புகார் எழுந்துள்ளது. காவல் நிலையத்தில் புகாரளிக்க வரும் பெண்களிடம், அவர்களின் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அதற்கு வெகுமானமாக புகாரளித்த பெண்களின் கற்பை கேட்டு விலைபேசி வம்பில் சிக்கியுள்ளார் நெல்லை, பாவூர்சத்திரம் காவல்நிலைய தலைமைக் காவலர் நடராஜன்.

புகாரளிக்க வரும் பெண்களின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு, புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க கற்பை விலை பேசியது அம்பலமானது!
இவரின் காம லீலைகளுக்கு இரையானோரின் எண்ணிக்கை 50 க்கும் அதிகமென விவரமறிந்த காவல்துறை நண்பர் தெரிவித்துள்ளார்! மேலும் புகாரளித்த பெண்களை தன்னுடைய தனியறைக்கு அழைத்துச் சென்று சிதைத்துள்ளதும் தனியார் டிவி சேனலின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.



இது குறித்து நெல்லை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் அலுவலக வட்டாரங்களில் விசாரித்த பொழுது " பாவூர்சத்திரம் காவல்நிலைய தலைமைக் காவலர் நடராஜன் மீது பல தரப்பிலிருந்தும் புகார்கள் குவியத் தொடங்கியுள்ளதாகவும், அந்த புகார்களை அடிப்படையாக கொண்டு துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இதற்கிடையே புகாரளிக்க வரும் பெண்களின் கற்பை விலை பேசிய தலைமைக் காவலர் நடராஜனை பணிநீக்கம் செய்து சிறையிலடைத்து விசாரணை செய்ய வேண்டும் என மகளிர் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் போராட்டங்களை நடத்த திட்டமிட்டு வருகின்றன.

Post a Comment

0Comments

Post a Comment (0)