Breaking

கர்நாடக தேர்தல் பிரச்சாரம் இன்றே கடைசி நாள்?

நம்நாடு செய்திகள்
0
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், ஒரு மாதத்துக்கும் மேலாக அனல் பறந்த தேர்தல் பிரசாரம், இன்று மாலை நிறைவடைகிறது.
கர்நாடகவில் உள்ள, 224 தொகுதிகளுக்கு மே 12-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. பெங்களூரு, ஜெயநகர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் விஜயகுமார், 59, பிரசாரத்தின்போது, மயங்கி விழுந்து, மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால், இந்த தொகுதியில் மட்டும், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மற்ற, 223 தொகுதிகளிலும், மொத்தம், 2,654 வேட்பாளர்கள், தேர்தல் களத்தில் உள்ளனர்.தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கிய வேளையில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உட்பட, பல தேசிய தலைவர்களும், மத்திய அமைச்சர்களும், கர்நாடகாவில் முகாமிட்டனர்.பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல், வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.
முதல்வர் சித்தராமையா, தான் போட்டியிடும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, கனகபுரா, ராம்நகர், சென்னபட்டணா; முன்னாள் முதல்வர் குமாரசாமி, குலேகுட்டா, பாதாமி உட்பட, பல இடங்களில், பிரசாரம் செய்தனர்.பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, துமகூரு, பெங்களூரின் சிவாஜிநகர், சர்வக்ஞ நகர், மகாதேவபுரா ஆகிய தொகுதிகளில், பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தன் தொகுதியான ஷிகாரிபுராவில், நேற்று, நாள் முழுவதும் பிரசாரம் செய்தார். இதுதவிர, சிறிய கட்சிகள் உட்பட அந்தந்த தொகுதி வேட்பாளர்களும், வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர்.ஓட்டுப்பதிவு நடப்பதற்கு, 48 மணி நேரத்துக்கு முன்னதாக பகிரங்க பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது. எனவே, கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம், இன்று மாலை, 6:00 மணியுடன் முடிவடைகிறது.

Post a Comment

0Comments

Post a Comment (0)