
அனந்தநாக் மாவட்டத்தில் பஹல்கம் நகரில் அஷ்டூகம் அருகே திங்கள் இரவு சுமார் 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இந்த கல்வீச்சு தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மாவட்ட மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் இரண்டு பேருக்கு மூன்று தையல்கள் போடப்பட்டு தொடர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். மீதமுள்ளவர்கள் பரிசோதனைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

பஸ்ஸில் சுற்றுலா வழிகாட்டியாக இருந்த ஷினில், "நாங்கள் பஹல்கம்மிலிருந்து ஸ்ரீநகரில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பயணித்தோம். நாங்கள் வரும் வழியில் அங்கு ஒரு மசூதியில் ஒரு திருவிழாவுக்காக மக்கள் கூட்டமாக கூடியிருந்தனர். அவர்கள் எங்கள் வாகனத்தின் பதிவு எண் "காஷ்மீரில் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டதும் கோபமடைந்த கூட்டம் நாங்கள் இருந்த வாகனத்தின் மீது கற்களை வீசித் தாக்கத் தொடங்கினர். இந்த தாக்குதலில் முதலாவதாக நின்றிருந்த வாகனத்தில் இருந்தவர்களுக்கே அதிக காயமேற்ப்பட்டது.

போலீஸ் வந்து எங்களை மீட்டு அழைத்துச் சென்று ஸ்ரீநகரில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் பாதுகாப்புடன் விட்டுச் சென்றனர்., ஷினைல் மேலும் கூறுகையில், இன்று காலை "பஹல்கம் இன் துணை பிரிவு நீதிபதி (எஸ்.டி.எம்) எங்களைச் சந்தித்து விசாரிப்பதற்க்காக ஸ்ரீநகரில் நாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்தார். இன்று காலை, சுற்றுலா போலீசார் புகார் பதிவு செய்துள்ளனர். "சுமார் 10,000 முதல் 15,000 பேருக்கு மதக் கூட்டம் நடைபெற்றது, வன்முறை வெடித்ததால் சில குழப்பங்கள் நிகழ்ந்தன. கேரளாவிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் குழு அந்த நேரத்தில் வன்முறைகளில் சிக்கியபோது கடந்து சென்றது. இவர்களில் சிலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். " என்று காவல்துறை உயரதிகாரிகள் கூறினார்கள்.