Breaking

I A S தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த கீர்த்திவாசன்

நம்நாடு செய்திகள்
0


டெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வில் கீர்த்தி வாசன் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் 27 வது இடத்தை கீர்த்திவாசன் பிடித்துள்ளார். திருச்சியில் படித்த கீர்த்திவசான் தமிழக அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைந்துள்ளார். ஐஏஎஸ் தேர்வு இறுதி முடிவை மத்திய தேர்வு ஆணையம் வெளியிட்டது. ஐஏஎஸ் பிரதான தேர்வு எழுதிய 13000 பேரில் 2567 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நேர்முகத் தேர்வில் பங்கேற்ற 2567 பேரில் 990 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கு தேர்வு செய்துள்ளனர். அகில இந்திய அளவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு 990 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னையை சேர்ந்த மதுபாலன், இந்திய அளவில் 71-வது இடமும், தமிழக அளவில் 2-ம் இடமும் பெற்றார்.

தேர்வானவர்களின் பட்டியல் http://www.upsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழகத்தில் இருந்து, 60-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த கீர்த்திவாசன், இந்திய அளவில் 27-வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்து உள்ளார்.

சென்னையை சேர்ந்த மதுபாலன், இந்திய அளவில் 71-வது இடமும், தமிழக அளவில் 2-ம் இடமும் பெற்று உள்ளார். ஐதராபாத்தை சேர்ந்த அனுதிப் துரிசெட்டி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)