Breaking

தமிழக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீா்ப்பு?

நம்நாடு செய்திகள்
0


நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் உள்பட 11 சட்டமன்ற உறுப்பினா்களை தகுதி நீக்கம் செய்யக் கோாிய வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் நாளை தீா்ப்பு வழங்குகிறது. 

கடந்த பிப்ரவாி மாதம் 18ம் தேதி முதல்வா் எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஓ.பன்னீா்செல்வம் உள்பட அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்கள் 11 போ் முதல்வா் மீது நம்பிக்கை இல்லை என்று வாக்களித்தனா்.
இதனைத் தொடா்ந்து ஓ.பன்னீா் செல்வம் உள்பட நம்பிக்கை இல்லை என்று வாக்களித்த 11 சட்டமன்ற உறுப்பினா்களையும் கட்சி தாவல தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். மேலும் கோவை வடக்கு தொகுதியைச் சோ்ந்த அருண் குமாா் கட்சி கொறடாவின் அனுமதியை பெறாமல் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தாா். அவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சக்கரபாணியின் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 
தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த வழக்கில் சென்னை உயா்நீதி மன்றம் இன்று (வெள்ளிக் கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு தீா்ப்பு வழங்க உள்ளது. 

Post a Comment

0Comments

Post a Comment (0)