Breaking

அமைச்சரவை மாற்றம்! புதியவர்களுக்கு வாய்ப்பு!

நம்நாடு செய்திகள்
0

ஜம்மு-காஷ்மீர் மாநில அமைச்சரவை திங்கள்கிழமை (ஏப்.30) மாற்றியமைக்கப்பட உள்ளது. இதில், பாஜக சார்பில் புதிய அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஜம்மு-காஷ்மீரில் முதல்வர் மெஹபூபா முஃப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில அமைச்சரவையில் பாஜக சார்பில் இடம்பெற்றிருந்த லால் சிங், சந்தர் பிரகாஷ் கங்கா ஆகியோர், கதுவா சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாக அண்மையில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றதற்கு எதிர்ப்பு எழுந்ததால் பதவி விலகினர்.

 இதைத் தொடர்ந்து, மாநில அமைச்சரவை திங்கள்கிழமை மாற்றியமைக்கப்படவுள்ளது. அதில், பாஜக சார்பில் புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும், ஏற்கெனவே இணையமைச்சர்களாக உள்ளவர்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

 கோடை காலத்தையொட்டி, மாநில தலைமைச் செயலகம் ஸ்ரீநகரில் இருந்து செயல்படவிருக்கிறது. இதன் காரணமாக, ஜம்முவில் உள்ள தலைமைச் செயலகமும், ஆளுநர் இல்லமும் கடந்த வெள்ளிக்கிழமை மூடப்பட்டன. எனவே, ஆளுநர் மாளிகைக்கு பதிலாக ஜம்முவில் உள்ள கூட்ட அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை, தலைமைச் செயலர் பி.பி.வியாஸ் மேற்கொண்டு வருகிறார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)