Breaking

முதல்வருக்கு கொலை மிரட்டல்? மிரட்டல் டுத்தவரை தேடும் போலீஸ்!

நம்நாடு செய்திகள்
0
கேரள முதல்வர் பினராயி விஜயன் தலை வெட்டப்படும் என்று நக்சலைட்டுகள் கொலை மிரட்டல் விடுத்து போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.

பாலக்காடு மாவட்டம், பழையனூர் பகுதியில் உள்ள போலீஸ் நிலையம் அருகே இந்த பதாகைகள் ஒட்டப்பட்டுள்ளனர். அந்தப் பதாகைகளில் கேரள ஆதிவாசிகளின் கவனிக்காத விஜயனின் தலை வெட்டப்படும் என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் குறித்தும் யாரும் புகார் செய்ததால் இதுவரை போலீஸார் எந்தவிதமான வழக்குப் பதிவும் செய்யவில்லை. இது குறித்து வடக்கன்சேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தில் உள்ள நக்சல்பாரி இயக்கத்தினர் இந்த போஸ்டரை ஒட்டி இருக்கலாம் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் ஆதிவாசி இளைஞர் ஒருவரை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்று, அவரை அடித்துக் கொன்று, காட்டுப்பகுதியில் வீசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், சமீபத்தில் சிறீஜித் (வயது26) என்ற ஆதிவாசி இளைஞரும் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டார், அதேபோல பாலக்காடு மாவட்டத்தில் மது என்ற ஆதிவாசி இளைஞரும் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவங்களால் நக்சல்பாரி இயக்கத்தினர் இந்தப் போஸ்டரை ஒட்டி இருக்கலாம் என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

Post a Comment

0Comments

Post a Comment (0)