Breaking

வருவாரா? வர மாட்டாரா? ஏங்கும் சேலம் மாவட்ட அதிமுக பிரமுகர்கள்! யாருக்காக?

நம்நாடு செய்திகள்
0


வாரம் தவறாமல் தனது சொந்த ஊருக்கு பயணம் செய்துவிடும் தமிழக முதல்வர் சமீப காலமாக தனது பிறந்த மண் பயணத்தை திடீர் திடீரென ரத்து செய்வது சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடையே பலவித சந்தேகங்களை எழுப்பியுள்ளது.



குறிப்பாக கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி “சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருக்கிறது கைலாசநாதர் கோயில். 10ஆம் நூற்றாண்டிலேயே இந்தக் கோயிலின் ஒரு பகுதி இருந்ததாகவும், 17ஆம் நூற்றாண்டில் இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டதாகவும் வரலாறு சொல்கிறது. அந்த அளவுக்குப் பழமையான சிவன் கோயில் . கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. அதன் பிறகு கடந்த ஞாயிறன்று அந்தக் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தொகுதி சீரமைப்பில் தாரமங்கலம் தொகுதி காணாமல் போக, அதன் ஒரு பகுதி எடப்பாடி தொகுதியிலும் இன்னொரு பகுதி ஓமலூரிலும் இணைக்கப்பட்டது. எடப்பாடி அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து இந்தக் கோயிலின் தீவிர பக்தர். கோயில் பூசாரிகள் எல்லோருமே முதல்வர் பழனிசாமிக்கு அத்துபடியாக தெரியும். கோயில் கும்பாபிஷேகத்துக்கு நேரில் வருவதாக முதல்வர் எடப்பாடியும் தேதி கொடுத்திருந்தார். முதல்வர் வருகிறார் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. சேலத்தில் இருந்து தாரமங்கலம் வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு வழி நெடுக முதல்வரை வரவேற்று ப்ளக்ஸ் வைக்கப்பட்டு இருந்தது. எங்க சாமியே பழனிசாமிதான் என்றெல்லாம் அவரை புகழ்ந்திருந்தார்கள். சேலத்தில் இருந்து தாரமங்கலம், ஜலகண்டபுரம் பகுதிகளுக்கு போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. கடந்த ஞாயிறு காலை விமானத்தில் சேலத்துக்கு செல்ல எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்தது. ஆனால் கும்பாபிஷேக விழாவுக்கு வருகை தரும் முதல்வருக்கு கறுப்புக் கொடி காட்ட " சேலம் விமான விரிவாக்கத்திற்க்கு நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட சுமார் 500 திட்டமிட்டுள்ளதாக சேலம் மாவட்ட காவல்துறை சனிக்கிழமை மாலை முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மேற்கண்ட கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் காண வருகை தரும் முதல்வர்கள் யாரும் தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்கவில்லை என்ற தகவலும் முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. அதனால் கடைசி நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சேலம் விஸிட் கடந்த வாரம் ரத்தானது.



இந்நிலையில் நாளைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பூர்வீக கிராமமான சேலம் அருகேயுள்ள சிலுவம்பாளையத்தில் முதல்வரின் வீட்டின் பின்பகுதியில் அவருக்கு சொந்தமான நிலத்தில் அமைந்திருக்கும் "அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோவில் " மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நாளை 27/4/18 காலை 7-8 மணிக்குள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலானது முதல்வர் "அமைச்சராக" இருந்த போது மறுசீரமைப்பு செய்து கட்டப்பட்ட கோவிலென்றும், கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்த எடப்பாடி Vs பன்னீர் மோதலின் போது முதல்வர் இந்தக் கோவிலில் சிறப்பு யாகங்கள் நடத்தியதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

முதல்வரின் வருகை உறுதிப்படுத்தப்படாததால் "பல்வேறு பஞ்சாயத்துகளுக்கு தீர்வு காண " அதிமுகவின் நிர்வாகிகளில் பலரும் வருவாரா? வரமாட்டாரா? என்று மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாகவே கள நிலவரம் தெரிவிக்கிறது!

Post a Comment

0Comments

Post a Comment (0)