
புதுடில்லி: 'இந்தியாவின் முதல் பிரதமர்' என்ற வார்த்தை Google India இன் தேடல் பெட்டியில் நீங்கள் உள்ளீடு செய்யும்போது ஒரு விறுவிறுப்பான விஷயம் நடக்கும்.
இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு என்ற தகவலுடன் விக்கிபீடியா இணைப்பு வலதுபுறத்தில் அந்த விக்கிபீடியாவின் லிங்கை காண முடியும்.
ஆனால் தகவலுடன் வரும் புகைப்படமோ நேருவின் புகைப்படமல்ல. அது நரேந்திர மோடியின் புகைப்படம். அச்சச்சோ.
இந்த குழப்பம் குறித்து கண்டனத்தைப் பதிவு செய்ய காங்கிரசின் ஊடகங்கள் பிரிவு தலைவரான திவ்யா ஸ்பந்தனாவை கருத்து தெரிவிக்க காங்கிரஸின் தொண்டர்கள் வலியுறுத்திய நிலையில் அவர் முற்றிலும் கோபமடைந்தவராக கூகுள் இந்தியாவுக்கு தனது கண்டனத்தை Twitter ல் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்

இந்தியாவில் பிரதம மந்திரிகளின் பட்டியல், விக்கிபீடியா இணைப்பில் கிளிக் செய்தால், இந்தியாவின் பிரதமரின் நிலைப்பாட்டை சரியாக விவரிக்கும் பக்கமும் சரியாக நாட்டின் அனைத்து பிரதமர்களும் சரியான வரிசையில் பட்டியலிடும் - மற்றும் அவர்களுக்கு அடுத்தபடியாக சரியான புகைப்படங்களுடன். ஆனால் நேருவின் படத்துக்கு பதிலாக மோடியின் படத்தைப் போட்டு
மோடியை நேரு என்று நம்ப வைக்க கூகுள் முயற்சிப்பதாகவும் நம் நாட்டின் தலைவர்கள் அறியாத வெளிநாட்டினர் எவரேனும் அந்த விக்கிபீடியா பக்கத்தில் உள்ள தகவல்களைப் பார்க்க நேர்ந்தால் மோடியை நேரு என்றே நம்பிவிடும் அபாயம் உள்ளதாக பலரும் வருந்துவதாக திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார்.