”பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருக்கும் சசிகலா குடும்பத்தாரை வரவழைத்து ஒரு மணி நேரம் குடும்பப் பஞ்சாயத்து செய்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதிசெய்யப்பட்டு பெங்களூர் சிறையில் சசிகலாவை அடைக்கப்பட்டுச் சரியாக ஒருவருடம் முடிந்துவிட்டது. சசிகலா சிறைக்குள் இருந்தாலும் குடும்பம், தொழில், அரசியலைக் கண்காணித்து இயக்கிவருகிறார்.
தினகரனுக்கும் விவேக்குக்கும் அடிக்கடி சிறு மோதல்கள் நடைபெற்றுத்தான்வருகிறது. இன்னொரு பக்கம் சசிகலா கணவர் நடராஜன் சகோதரர்கள் முரண்பட்டுவருகிறார்கள், ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஒருபக்கம் நடைபெற்றுவருகிறது. இந்த சூழல்களைப் பற்றியெல்லாம் பேசுவதற்குத்தான் நேற்று (மார்ச் 12) தினகரன், விவேக் அவரது மனைவி கீர்த்தனா, இளவரசி மருமகன் ராஜராஜன், நடராஜன் சகோதார்கள் விஸ்வநாதன், ராமச் சந்திரன், பழனிவேல், வழக்கறிஞர் அசோகன், ஜெயலலிதாவுக்கு உதவியாளராகவிருந்த கார்த்திக் ஆகிய பத்துபேர் சசிகலாவால் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மதியம் 1.15 மணிக்குச் சிறைக்குள் சென்றவர்கள் ஒரு மணிநேரம் கழித்துதான் வெளியில் வந்தார்கள்.
உறவுகள் எல்லாரிடமும் நலம் விசாரித்த சசிகலா, அடுத்தபடியாக கணவர் நடராஜனின் சகோதரர்களிடம் சிலநிமிடங்கள் பேசியிருக்கிறார். கார்த்திக்கிடமும் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தாராம் சசிகலா. கடைசியாகத்தான் விவேக் மற்றும் தினகரனிடம் தனித் தனியாக பேசியுள்ளார். இருவரும் தங்களது மன வருத்தங்கள் பற்றி சசிகலாவிடம் சொல்லியிருக்கிறார்கள். அதன் பின், ‘அனுராதா இனி தினகரனின் அரசியல் டூர் புரோகிராம்களுக்கு உதவியா இருக்கட்டும். அக்காவுடன் கட்சி ரூர் போகும்போது அனுவும் வந்திருப்பதால் அவர் அதை பண்ணட்டும். ஜெயா டிவி சேனல்களை விவேக் தொடர்ந்து கவனிக்கட்டும்’ என்றெல்லாம் சமாதானப் பஞ்சாயத்து செய்து அனுப்பி வைத்தாராம் சசிகலா’’ மேலும் தினகரன் இதுவரை நெருக்கம் காட்டி வந்த பாஜக பிரமுகர் சுனா சாமியுன் இனி நேருக்கம் காட்ட வேண்டாமென்றும், நடராஜன் மூலமாக எந்த அரசியல் ஆலோசனைகளையும் செய்யக் கூடாதென்றும் கண்டிப்பான உத்தரவை தினகரனுக்கு பிறப்பித்துள்ளதாகவும் , விவேக்கின் தாய் வழி உறவினர் தகவல் தெரிவித்தார்.
Post a Comment
0Comments