Breaking

19 நாட்களில் 931 பேர் பலி: சிரியா போர் குறித்து மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் தகவல்

நம்நாடு செய்திகள்
0

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.


இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக போர் உக்கிரமடைந்துள்ளது. இதன் காரணமாக ஏராளமான குழந்தைகள் உள்பட பொதுமக்களும் பலியாகி வருகின்றனர். இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதற்கிடையில், சிரியா போரை கண்காணித்து வரும் மனித உரிமைகளுக்கான ஆணையம், கடந்த 19 நாளில் நடைபெற்ற சிரியா போரில் 931 பேர் பரியாகி உள்ளதாக தெரிவித்து உள்ளது.


கடந்த பிப்ரவரி 18 ம் தேதி முதல் மார்ச் 8 வரை நடந்த போரில் 195 குழந்தைகள் மற்றும் 125 பெண்கள் உள்ளிட்ட 931 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், சில பகுதிகளில் குளோரின் வாயு தாக்குதல் நடந்ததற்கான தடயம் கிடைத்திருப்பதாகவும் கூறி உள்ளது.


சிரியாவில் ராணுவத்தினருக்கும்,கிளர்ச்சியாளர்களுக்கும் 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. போர் நிறுத்தம் வேண்டும் என்றும், குறைந்தது ஒருநாளைக்கு 5 மணி நேரமாவது போர் நிறுத்தம் செய்ய ஐநா சபை கேட்டுக்கொண்டது. ஆனாலும் தொடர்ந்து உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. Patrikai.com

Post a Comment

0Comments

Post a Comment (0)