Midnight ல இருந்தே #அஇஅதிமுக அவைத்தலைவர் #மதுசூதனன் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் #அதிமுக வினர் பதிவு செய்து வரும்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவைத்தலைவர் மதுசூதனின் உடல்நலன் பற்றி விசாரிப்பதற்காக அப்பொல்லோ ஆஸ்பத்திரிக்கு செல்லப் போவதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொலைக்காட்சி #Newsj செய்தி வெளியிட்டிருக்கிறது...
எது உண்மைனே புரியலை....
தகவலை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அதிமுக தலைமை அலுவலக நிர்வாகியைத் தொடர்பு கொண்ட போது " அவைத் தலைவரின் உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது, ஓபிஎஸ் நேற்று இரவு ஆஸ்பத்திரிக்கு சென்று மதுசூதனனின் உடல்நிலை பற்றி விசாரித்துச் சென்றுள்ளதாகவும், இன்று இபிஎஸ் ஆஸ்பத்திரிக்கு வந்து மதுசூதனனின் உடல்நிலை பற்றி விசாரிக்க உள்ளதாகவும்" கூறியுள்ளார்கள்...
எது எப்படியோ #அவைத்தலைவரின் இறப்பு அதிமுகவில் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தும் நிகழ்வாக மட்டுமே இருக்கப் போகிறது....
Post a Comment
0Comments